திராவிடத்தை நேசிக்கும் தமிழன் தளபதி விஜய்.! சூப்பர் ஹிட் இயக்குனர் புகழாரம்.!

விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசு தனது டிவிட்டர் பக்கத்தில் நிதியுதவி அளித்த விஜயை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

கொரோனா முன்னெச்செரிக்கையால் அரசு முன்னெடுத்த ஊரடங்கு நடவடிக்கையால் பல தொழிலாளர்கள், தினக்கூலிகள், கட்டட தொழிலாளர்கள் என பலர் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதனால் பலரும் தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருள் உதவிகளை அளித்து வருகின்றனர்.

திரை நட்சத்திரங்கள், அஜித், சிவகார்த்திகேயன் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை அளித்து வந்தனர்.இந்நிலையில், நடிகர் விஜயும் கொரோனா நிவாரண நிதியாக 1.30 கோடி ரூபாய் நிதியளித்து உள்ளார். அவர், மத்திய அரசு, தமிழக அரசு, சினிமா தொழிலாளர் சங்கம், புதுசேரி அரசு, கேரளா அரசு, கர்நாடக அரசு, ஆந்திர அரசு, தெலுங்கானா அரசு என பலவாறு நிதியுதவியை பிரித்து கொடுத்தார். இவரது உதவியை பலரும் பாராட்டியிருந்தனர்.

அந்தவகையில், விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசு தனது டிவிட்டர் பக்கத்தில் நிதியுதவி அளித்த விஜயை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதில், ‘ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே, மனிதர்களின் பெருங்குறை! தளபதி தானத்தளபதி என்று மீண்டும் நிரூபித்து விட்டார். திராவிடத்தை நேசிக்கும் தமிழனாய் தளபதி மிளிர்கிறார்! தளபதி விஜய்க்கு தலைவணங்கி நன்றிகள் கோடி!’ என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.