வரும் உள்ளாட்சி தேர்தலில் தமிழக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – ஹெச்.ராஜா

கடந்த ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 மாநில அரசு அளித்தது. அப்போது அந்த தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று கூறிய தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் மக்களுக்கு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம், செலவ புரம் பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 மாநில அரசு அளித்தது.

அப்போது அந்த தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று கூறிய தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் மக்களுக்கு அளித்துள்ளார். இந்த பொங்கல் தொகுப்பில் கலப்படமான பொருட்களை வழங்கியுள்ளனர்.

பொங்கல் தொகுப்பு வழங்க செலவிடப்பட்ட ரூ.1800 கோடியில், ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. எனவே இந்த ஊழல் ஆட்சியை புரிந்துகொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.