மக்களே.! சைனஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.!

உங்களுக்கு அடிக்கடி மோசமான தலைவலியுடன், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு மற்றும் முகத்தில் வலி ஆகியவை ஏற்படுகிறதா..? அது சைனஸின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். கார்த்திகை மாதம் வந்தாலே அவ்ளோதான் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா இளைப்பு என அனைத்து பிரச்சினைகளும் வருசையாக வந்துவிடும். அதிலும், குளிர் காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறிவிடுகிறது.

வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்கும் நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் சைனஸால் அவதிப்படுகின்றனர் என்றும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு சைனஸ் பாதிப்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உடலில் அதிக சளியை உருவாக்கும் உணவுகளை சாப்பிட்டால் அது நிலைமையை மோசமாக்கும்.

அதில், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள்,  ஆகியவை அடங்குகிறது. இந்நிலையில், சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழம்:

வாழைப்பழம் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் தான், வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். வெயில் காலத்தில் சாப்பிட ஏற்ற சிறந்த பழம். ஆனால் இது குளிர் காலத்திற்கு அப்போசிட் ஆக மாறுகிறது. அதாவது, சளி, இருமல், ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்.

அந்த வகையில், மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர். காரணம்; சென்னை வாசிகளின் தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன் என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

மாட்டிறைச்சி:

கர்ப்பிணிப் பெண்கள் நான்காம் மாதத்திலிருந்து மாட்டுக்கறி உணவை உண்ண மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப் படுகிறார்கள். மாட்டிறைச்சியில் அதிகமாக புரோட்டீன் உள்ளது. இது உடலில் சளி தேக்கத்தை அதிகமாக்கி உங்களுக்கு இருக்கும் சைனஸ் அறிகுறிகளை மேலும் கடுமையாக்கும். இதனால், சைனஸ் உள்ளவர்கள் மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

தக்காளி:

தக்காளிப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிரம்பியிருக்கிறது. இது, உடலில் ஹிஸ்டமைன் உற்பத்தியை அதிகரித்து அதிகளவு சளியை உருவாக்கிறது மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலம் தொண்டைக்கு சென்று வரும் போது, அது தொண்டையில் வீக்கத்தை உண்டாக்குவதுடன், அதில் சளியையும் ஒட்ட வைக்கும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.