“தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500-ஐ மக்கள் என்றும் மறக்கக்கூடாது” – அமைச்சர் விஜயபாஸ்கர்!

“தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500-ஐ மக்கள் என்றும் மறக்கக்கூடாது” – அமைச்சர் விஜயபாஸ்கர்!

பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500-ஐ மக்கள் என்றும் மறக்கக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்றும், அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்திற்காக ரூ.5,604 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த பொங்கல் பரிசு விநியோக பணிகளை ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், இதில் வாங்க முடியாதவர்களுக்கு 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பரிசு பொருட்களுக்கான டோக்கன்களை வழங்கும் பணிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500-ஐ மக்கள் என்றும் மறக்கக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது.

Join our channel google news Youtube