மக்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

ஊரடங்கில் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என சென்னை உய்ரநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், இதுவரை கொரோனா வைரஸால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 பேர் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசு சில தாளர்வுகளை அறிவித்துள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய பணிக்காக வெளியே செல்வோரை துன்புறுத்தக் கூடாது என்று  ஊரடங்கில் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என சென்னை உய்ரநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும், விதிகளை மீறுவோர் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.