மேற்கு வங்கத்தில் வெறுப்பு அரசியலை வீழ்த்திய மனசாட்சி உள்ள மக்கள்…! பாஜக-வுக்கு தக்க பதிலடி…! – அகிலேஷ் யாதவ்

மேற்கு வங்கத்தில் வெறுப்பு அரசியலை வீழ்த்திய மனசாட்சியுள்ள மக்கள், மம்தா பானர்ஜியின் போராட்டம், அர்ப்பணிப்பான தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அங்கு 294 தொகுதியில் 292 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இந்த 292 தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் பாஜக 78 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது .

மம்தா பானர்ஜியின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் டுவிட்டரில் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘மேற்கு வங்கத்தில் வெறுப்பு அரசியலை வீழ்த்திய மனசாட்சியுள்ள மக்கள், மம்தா பானர்ஜியின் போராட்டம், அர்ப்பணிப்பான தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தி ஓ தீதி (சகோதரி ஒய்  சகோதரி) என்று கிண்டலாகப் பேசிய பாஜகவுக்கு இந்த வெற்றி தகுந்த பதிலடி.’ என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.