மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது காட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும்,  ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், காரில் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், பொது இடத்தில் எச்சில் துப்ப கூடாது. மீறினால், ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.