கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த 1075 என்ற எண்ணிற்கு அழைக்கவும் – மத்திய அரசு..!

தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மா வெள்ளிக்கிழமை,கிராமப்புறங்களில் தடுப்பூசிக்கான விழிப்புணர்வை அதிகரிக்க  1075 ஹெல்ப்லைன் எண்ணை பயன்பாட்டிற்கு அரசாங்கம் கொண்டு வந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.

இந்தியாவில் தடுப்பூசி பிரச்சாரம் நடந்து வருகிறது. இதுவரை 20.54 கோடி  மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி தொடர்பான முக்கியமான தகவல்களை மத்திய அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.இன்று நாடு முழுவதும் கிராமப்புறங்களில் தடுப்பூசிக்கான விழிப்புணர்வை அதிகரிக்க  ‘1075’ ஹெல்ப்லைன் எண்ணைக் கொண்டு வந்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மா இன்று தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் தொழில்நுட்பம் மற்றும் இணையம் வசதி இல்லாத இடங்களில்  ஹெல்ப்லைன் எண்ணான ‘1075’ ஐ அழைத்து தங்கள் கோவிட் தடுப்பூசி இடத்தை பதிவு செய்யலாம் என்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தில் கிராமப்புறங்களில் மக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சர்மா மறுத்துள்ளார்.கிராமப்புற மக்கள் தங்களுக்கான தடுப்பூசியை எளிதில் பதிவு செய்ய மற்றும் அதனை  உறுதிப் படுத்த அனைத்து பொது சேவை மையங்களும் அரசாங்கத்துடன் சேர்ந்து இத்தகைய பணிகளை செய்கின்றனர்.

இதில் ,கிராமப்புற மக்களிடையே ஹெல்ப்லைன் எண் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட சேகரிப்பாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களின் பணியாளர்கள் உதவுகிறார்கள் என்று தெரிவித்தார்.

45 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் நேரடியாக மையத்திற்குச் சென்று பதிவு செய்து தடுப்பூசி போடுகிறார்கள் என்று சர்மா கூறினார். தடுப்பூசிகள் குறைவாக வழங்கப்படுவதால் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதில் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இது ஒரு தற்காலிக பிரச்சினை என்றும் அவர் கூறினார்.

இந்தியா தனது கொரோனா தடுப்பூசி திட்டத்தை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல்  துவக்கியது.இதில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. பின்னர், மார்ச் 1 ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 60-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 1, 2021 முதல், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.அதன் பின் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டது.இதற்கிடையில் மே 27 வரை இந்தியா கிட்டத்தட்ட 20.54 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.அரசு வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் 20,54,51,902 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் முதல் டோஸ் பெற்ற 98,27,025 சுகாதார பணியாளர்களும்,இரண்டாவது டோஸை 67,47,730 பேர் எடுத்துக்கொண்டுள்ளனர்.1,53,39,068 முன்களப்  பணியாளர்கள் முதல் டோஸ் பெற்றிருக்கிறார்கள்.இதில், 84,19,860 பேர் தங்கள் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.

45-59 வயதுக்குட்பட்டவர்களில், 6,35,32,545 பேர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், இதில் ,1,02,15,474 பேர் தங்கள் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.60+ மேற்பட்டவர்களில் 5,77,48,235 பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.அதில்  1,84,69,925 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.புதிதாக சேர்க்கப்பட்ட  18 முதல் 44 வயது பிரிவில் 1,51,52,040 பேர் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,75,55,457 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,364  ஆக உள்ளது. 3,660 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை நாடு முழுவதும் 3,18,895 பேர் உயிரிழந்துள்ளனர்.

murugan

Recent Posts

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

11 mins ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

27 mins ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

38 mins ago

வெயில்ல வெளில போகப் போறீங்களா? அப்போ மறக்காம இதெல்லாம் எடுத்துட்டு போங்க..!

Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…

38 mins ago

செந்தில் பாலாஜியின் காவல் 35வது முறையாக நீட்டிப்பு!

Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

57 mins ago

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…

2 hours ago