நோய் கட்டுபாடு பகுதிகளில் உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம்…!

நோய் கட்டுபாடு பகுதிகளில் உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம்…!

கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிற நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா  முழுவதும், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், டெல்லியில், கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிற நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன்  செயல்படலாம், வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு வாய்ப்புள்ளவர்கள் அந்த முறையையே பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இருப்பவர்கள் அலுவலகத்திற்கு  வரவேண்டாம் என்றும், சுவாலாக்கங்களில் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது, முகாகவசம் அணிவது உள்ளிட்டாவை கட்டாயம் கட்டாயம் என்றும், ஆலோசனை கூட்டங்களை காணொலி வாயிலாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube