மக்களே மண்பானை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத சில உண்மைகள்

  • நம் முன்னோர்கள் பேணி பாதுகாத்த மண்பானை பாரம்பரியம் பற்றி இதுவரை அறிந்திராத சில உண்மைகள்.
  • ஆயுசு நாளை கூட்டி கொடுக்கும் மண்பானை சமையல்.

மண்பானை இன்று அதிகமாக கிராம புறங்களில் தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது.

கோடைகாலம்

கோடைகாலம் தொடங்கி உள்ளது. கோடைகாலம் என்றாலே மக்கள் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் பானங்கள் அனைத்துமே குளிர்ச்சியாக இருக்க  விரும்புவார்கள். கோடைகாலத்தில் குளிச்சியான உணவுகள் மற்றும் பானங்களை அருந்துவது நல்லது தான்.

Image result for கோடைகாலம்

ஆனால், உணவு மற்றும் பானங்களின் குளிர்ச்சி இயற்கையானதாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான், அந்த குளிர்ச்சியை நமது உடல் ஏற்றுக் கொள்ளும் போது, அதனால் எந்த தீமைகளும், ஆரோக்கிய கேடுகளும் ஏற்படாது.

செயற்கை தண்ணீர்

நாம் பயன்படுத்தும் தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும், செயற்கையானதாக தான் இருக்கிறது. என்று நாம் இயற்கையை மறந்து செயற்கையான உணவுகளுக்கு மாறினோமோ அன்றே நமது கலாச்சாரமும் சீர்கெட்டு விட்டது, உடல் ஆரோக்கியமும் சீர்கெட்டு விட்டது.

தற்போது நாம் இந்த பதிவில் மண்பானை குறித்து நாம் அறிந்திராத சில உண்மைகள் பற்றி பார்ப்போம்.

நிலத்தடி நீர்

முற்காலத்தில் நாம் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தியது நிலத்தடி நீர் தான். இந்த நீரை நாம் பயன்படுத்தியதால், நமக்கு நிலத்தடியில் இருந்து கிடைக்கும் நீரால், நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருட்களும் கிடைத்து விடுகிறது.

Related image

ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் மினரல் வாட்டரில், சாதாரண நீரில் உள்ள சத்துக்கள் கிடைப்பதில்லை.

மண்பானை தண்ணீர்

மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு, அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

Related image

மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடித்தால், தண்ணீரில் உள்ள கெட்ட பொருட்களை அளிப்பதோடு, நமது உடலுக்கு தேவையான சக்திகளையும் அளிக்கிறது. மேலும், இது நமது உடலுக்கு தேவையான பிராண சக்தியையும் அளிக்கிறது.

இயற்கையான உணவு

மண்பானை சமையல், நாம் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும், இயற்கையான உணவான மண்பானை உணவில், இருந்து பெற முடியும். நமது முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்ததற்கு காரணமும் இந்த மண்பானை சமையல் தான்.

Related image

ஏனென்றால், மண்பானையை போல் பயன் அளிக்ககூடிய பித்தலை, செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி என்ற ஐந்து வகையான உலோகங்களை சமையல் பாத்திரங்களாக பயன்ப்படுத்தி உள்ளனர். இது நமது உடலுக்கு தேவியான அனைத்து வகையான சத்துக்களையும் அளிக்கிறது.

மண்பானை சமையல்

Related image

மண்பானை சமையல் மிகவும் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மண்பானையில் தயிர் ஊற்றி வைத்தால் நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்கிறது. மண் பாண்டத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள், அல்சர் போன்ற வயிற்று பிரச்சனைகள் குணமாகிறது. மேலும், இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த உலகில் நாம் நீண்ட நாள் வாழ ஆயுளையும் தருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment