29 C
Chennai
Wednesday, June 7, 2023

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்!

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண...

மக்களே வெளியே வராதீங்க…கொளுத்த போகும் ‘வெயில்’…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்.!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதிகரிக்கும் வெப்ப அலை 

இன்று முதல் வரும் 18 -ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு..? 

மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 20-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்காக எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.