மக்களே கவனமாக இருங்கள்…! அரசு சொத்துக்களை விற்பதில் மும்மரம் காட்டுகிறது…! – ராகுல்காந்தி

மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் அரசு சொத்துக்களை விற்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், அரசு சொத்துக்களின் மூலம் பணமாக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். இத்திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யுமான  ராகுல்காந்தி அவர்கள் இது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிகரித்துவரும் கொரோனா பரவல் கவலை அளிக்கும் விதமாக  உள்ளது. அடுத்த அலையில் தீவிரமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும். மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் அரசு சொத்துக்களை விற்பதில் மும்முரம் காட்டி வருகிறது.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.