வெளிநாட்டு விமான பயணிக்கு பிசிஆர் கட்டாயம் - தமிழக அரசு

விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  வெளிநாடுகளில்

By balakaliyamoorthy | Published: Jun 02, 2020 06:02 PM

விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இதன்மூலம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவாரை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதுபோன்று மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

அதுமட்டுமில்லாமல் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்றாலும் வந்தாலும், இ- பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி என்று குறிப்பிட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் முன்பாகவே தமிழகத்தில் பயணிப்பதற்கான இ- பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்புயோர் தனிமைப்படுத்த மாட்டாது என்றும் கூறியுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc