இனி அரசு பேருந்துகளில் Paytm வசதி – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.!

2 அரசு பேருந்துகளில் சோதனை முயற்சியாக paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் இன்று முதல் பொதுப்போக்குவரத்து 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் தனியார் பேருந்துகளும் 60% பயணிகளுடன் இயங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.  மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். 2 அரசு பேருந்துகளில் சோதனை முயற்சியாக paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து பணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். அரசு பேருந்து ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படவில்லை என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்