99 மீனவர்களைக் காப்பாற்றுமாறு தமிழக முதல்வர் பழனிசாமிக்குப் பவன் கல்யாண் வேண்டுகோள்!

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வருவதற்கோ அல்லது மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கோ இயலாத நிலை காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து முடங்கியதால் மக்களும் முடங்கிப் போயுள்ளன.  கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், தெலுங்கு நடிகரும் பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபெர்ரா மண்டலத்தின் கிராமத்தில் இருந்து, மீன்பிடிக்க தமிழக கடற்கரை எல்லைக்குள் சென்ற சுமார் 99 மீனவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக  சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு போதிய தங்கும் வசதி மற்றும் உணவு என்று மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர்.

அவர்களது குடும்பத்தார் இது குறித்து செய்வதறியாது தவித்து வருகிறார்கள் என ஜனசேனா தொண்டர்கள் மூலம் இந்த விடயத்தை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயம் தெரிந்த உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.