நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய பவன் ஜல்லாட்க்கு ரூ.80,000.!

இன்று அதிகாலை 05.30-க்குமணிக்கு  நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறை வேற்றப்பட்டது. இந்தத் தூக்கு தண்டனையை பவன் ஜல்லாட் என்பவர் நிறைவேற்றினார்.

பவன் ஜல்லாட் மீரட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் டெல்லி திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அதைத் தொடர்ந்து நேற்று திஹார் சிறையில் தூக்கு தண்டனையை ஒத்திகை செய்து பார்த்தார்.

இந்நிலையில் சிறையில் தனி அறையில் தங்கிய பவன் அதிகாலை 05.30-க்கு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினார்.தூக்கு பின்னர் பணியாளர் பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும்  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

 பவனுக்கு ஒருவரை தூக்கிலிட ரூ.20,000 என  நான்கு பேருக்கு  80,000 ஊதியமாக தரப்படுகிறது.நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து  திஹார் சிறை வெளியே தேசிய கொடியை ஏந்தியும், இனிப்பு வழங்கியும் 100- க்கும் மேற்பட்டோர் கொண்டாடினர்.