இன்று மாலை வெளியாகிறது பட்டாஸ் படத்தில் தனுஷ் பாடிய பாடல் #ChillBro

அசுரன் திரைப்பட வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் பட்டாஸ்  ஆகும்.இந்த படத்தை எதிர்நீச்சல்,காக்கி சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் புன்னகை அரசி சினேகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.விவேக் -மேர்வின் இந்த படத்திற்கு இசை அமைத்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் பட்டாஸ் படத்தின் முதல் சிங்கிள் சில்ப்ரோ என்ற பாடல் வெளியாகிறது.இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். இன்று மாலை 6.30 மணிக்கு இந்த  பாடல் வெளியாகிறது.குறிப்பாக தனுஷ் பாடும் பாடல்கள் அனைத்தும் அதிக வரவேற்பை பெரும் நிலையில் தற்போது இந்த #ChillBro பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.