படுக்கை வசதியின்றி பரிதவிக்கும் நோயாளிகள்…! பீகாரில் மாடுகள் தங்குமிடமாக காணப்படும் அரசு ஆரம்ப சுகாதார மையம்…!

பீகார் மாநிலத்தின் மதுபனி மாவட்டத்தில் உள்ள சுக்கி கிராமத்தில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார மையம் பசு தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறத. இருப்பினும் பல மாநிலங்களில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில், படுக்கை வசதி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை என பலரும் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தின் மதுபனி மாவட்டத்தில் உள்ள சுக்கி கிராமத்தில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார மையம் பசு தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒரு கிராமவாசி கூறுகையில், இந்த சுகாதார மையத்திற்கு ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் வருகை தந்தது இல்லை என்றும், மற்றொருவர் கூறுகையில், ஒரு துணை செவிலியர் மற்றும் ஒரு செவிலியர் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அவர்கள் கொரோனா தொற்று காரணமாக காஜவுலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.