தூத்துக்குடியில் கொரோனா வார்டில் நொண்டி விளையாடும் நோயாளிகள்.!

தூத்துக்குடியில் கொரோனா வார்டில் நொண்டி விளையாடும் கொரோனா நோயாளிகள்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2000, தாண்டியது மேலும் இதுவரை 14பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோய்யாளிகள் ஒன்று சேர்ந்து மருத்துவமனையில் நொண்டி விளையாடியுள்ளனர். மேலும் நோயாளிகள் விளையாடுவதால் மன‌ அழுத்தம் போக்கும் உரிய சிகிச்சை அளிப்பதுடன் சில முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.