ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தாரா ஷாருக்கான்..? ‘பதான்’ எப்படி இருக்கு? ட்வீட்டர் விமர்சனம் இதோ.!

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பதான் திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

அதிரடி ஆக்‌ஷன்-த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை ட்வீட்டரில் கூறி வருகிறார்கள். படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ” பதான் உறுதியான கதையுடன் கூடிய ஹை வோல்டேஜ் ஆக்ஷன் டிராமா, சித் ஆனந்த் ஷாருக்கான் நடிப்பில் நாம் விரும்புவது போல் கதைசொல்லல் அற்புதம் ” என 4-5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.

மற்றோருவர் ” சூப்பர் ஆக்ஷன், திருப்பங்கள் & த்ரில்ஸ் முழுமையான பொழுதுபோக்கைத் தருகிறது.ஷாருக்கான் தனது தீவிரம் மற்றும் வசீகரத்தால் திரையைத் தட்டி எழுப்பினார். கடைசி 20 நிமிடங்கள் & சல்மான் கான் கேமியோ மாஸ் ஹிஸ்டீரியாவை உருவாக்குகிறது” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” பதான் படம் அருமையான ஆக்‌ஷன் படம், இடம் மற்றும் சண்டைக் காட்சிகள் வேகமான த்ரில்லான திரைக்கதை, ஆக்‌ஷன் படம் மட்டுமல்ல, அதை ஆதரிக்கும் ஒரு திடமான கதையம்சம் கொண்டது. ஷாருக்கான் நடிப்பு அருமையாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

விமர்சனத்தை வைத்து பார்க்கையில், ரசிகர்களின் காத்திருப்பை நடிகர் ஷாருக்கான் பூர்த்தி செய்தார் என்றே தெரிகிறது. எனவே படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது பெரிய பிளாக் பஸ்டர் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Leave a Comment