34.4 C
Chennai
Monday, May 17, 2021

#National Unity Day-145வது பட்டேல் பிறந்த நாள்… பிரதமர் மரியாதை

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில்  கெவாடியாவில் அமைத்துள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

சிஆர்பிஎஃப் மற்றும்  பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Latest news

Related news