28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார் தாமஸ் கோட்டூர் கன்னியாஸ்திரி குற்றவாளிகள் என தீர்ப்பு!

கன்னியாஸ்திரி அபயா கொலை விவகாரத்தில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா. இவர் அங்குள்ள பிஎம்சி கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் தனது படிப்புக்காக செயின் பயஸ் கான்வென்டில் தங்கியிருந்துள்ளார். இதனை அடுத்து, இவர் கடந்த 1992-ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி இந்த கான்வென்ட் வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் அபயா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் கோட்டையம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த சிபிஐ குழு நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலையாளிகளை கண்டறிய சிபிஐ குழு அமைக்கப்பட்ட நிலையில், அபயாவை பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததை கண்டுபிடிக்கப்பட்டது. பாதிரியார்களுக்கும் கன்னியாஸ்திரி செபிக்கும் தகாத உறவு இருந்துள்ள நிலையில், இதை ஒருமுறை அபியா நேரில் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது.

தங்களின் தகாத உறவை அபயா வெளியே கூறி விடுவார் என்று பயந்து போன பாதிரியார்கள், கன்னியாஸ்திரி அபாயவை கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர். இந்நிலையில், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கேரள ஐகோர்ட்டை  அணுகியுள்ளார்.
பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்ற இருவர் மீதும் வழக்கு நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இந்த வழக்கில் 177 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.  இந்த வழக்கு குறித்து இன்று தீர்ப்பளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.
மேலும், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். தீர்ப்பை கேட்டதும் பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் கதறி அழுதனர். தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.