பேருந்திகுள் மழை! குடை பிடித்து பயணம் செய்த பயணிகள்!

பேருந்திகுள் மழை! குடை பிடித்து பயணம் செய்த பயணிகள்!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 58 எஸ்டேட் உள்ளது. இந்த 58 எஸ்டேட்களுக்கும் வால்பாறையில் இருந்து அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் தொடக்கி அக்டோபர் மாதம் வரை மழை பெய்வது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில்  பெய்த மழையில் ராயன் எஸ்டேட் பகுதிக்கு சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் மேல் கூரையில் உள்ள ஓட்டையால் மழை நீர் நேரடியாக பேருந்துக்குள் நுழைகிறது.

இதனால் பயணிகள் இருக்கையில் அமரமுடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் பேருந்தில் குடை வைத்து கொண்டு பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.பழைய பேருந்துகளை இயக்குவதால் அங்கு அதிகமாக விபத்து நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பழைய பேருந்துகளை  இயக்குவதை நிறுத்தி விட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube