கேரளா நிவாரண நிதி உதவிக்காக வித்தியாசமாக சிந்திக்கும் விசித்திர இயக்குனர்

கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல லட்சகணக்கான மக்கள் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பலர் தங்களது உறவுகளை இழந்தும் மிகவும் கஷ்டபடுகிறார்கள்.
இதனால் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை நன்கொடை மூலமாகவோ, அல்லது நிவாரண பொருட்கள் மூலமாகவோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்யும் இயகுனர் ரா.பார்த்திபன் நிவாரண உதவிகளை திரட்டுவதிலும் வித்தியாசமாக யோசித்து, ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நாளை (22.08.2018) புதன் கிழமை மாலை ஐந்து மணிக்கு YMCA மைதானத்தில் ஒரு கண்காட்சியை நடத்துகிறார்.
இதில் பல புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளன. மேலும் பார்த்திபன் இயக்கிய கதை திரைகதை வசனம் இயக்கம் படத்தின் DVDயும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை வாங்குவோருக்கு இயக்குனர் இமையம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் பார்த்திபன் இருவரும் கையெழுத்து போட்டு தருவோம் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment