நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒரு மணிநேரம் அவை ஒத்திவைப்பு.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒரு மணிநேரம் அவை ஒத்திவைப்பு.!

மறைந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு மக்களவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் வரை நடைபெறும். ஆனால், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை கூடுகிறது. விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் என்றும் அறிவித்தனர். நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்ட மழைக்கால கூட்டத்தொடரில் ஆளும் கட்சி, எதிர் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டு பங்கேற்றுள்ளனர். அப்போது, மறைந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு மக்களவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் அவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட்டுக்கு எதிரான வாசகத்துடன், மாஸ்க்கை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube