மாலையில் நடக்கிறது நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர்.!

மாலையில் நடக்கிறது நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர்.!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் வரும் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் வரும் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர். முதல் நாளான செப்டம்பர் 14ல் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களவை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மக்களவை, மாநிலங்களவையில் எம்.பி.க்கள் அமரும் இருக்கை, மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி, நோய் பரவலைத் தடுக்கும் வகையில் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அண்மையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க வரும் எம்.பி.க்கள் அனைவரும் 72 மணிநேரத்துக்கு முன், கொரோனா பரிசோதனை செய்திருத்தல் அவசியம் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். எம்.பி.க்கள் மட்டுமல்ல கூட்டத்தொடரில் பங்கேற்கும் அமைச்சரவை அதிகாரிகள், ஊடகத்தினர், மக்களவை, மாநிலங்களவை அதிகாரிகள், பணியாளர்கள், செயலாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்தபின் தொற்று இல்லாத நிலையில்தான் பங்கேற்க வேண்டும் என்றும் மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube