நாடாளுமன்ற உணவு மானியம் ரத்து… உணவு விலை பட்டியலில் மாற்றம்..!

நாடாளுமன்றத்தில் உள்ள கேன்டீனில் உறுப்பினர்களுக்கும் மானிய விலையில் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், எம்.பி.க்கள் மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருவதாக பலரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், மானிய விலை உணவு வழங்குதை ரத்து செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

இதுகுறித்து ஓம் பிர்லா கூறுகையில், நாடாளுமன்ற கேன்டீன் உணவு மானியம் ரத்து செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ.8 கோடி மிச்சமாகும் என தெரிவித்தார். இந்த புதிய விலை பட்டியல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, பட்டியலில் குறைந்தபட்சமாக சப்பாத்தி ரூ.3-க்கும், அதிகபட்சமாக அசைவ பஃபெட் விருந்து ரூ.700-க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மட்டன் பிரியாணி ரூ.65-லிருந்து ரூ.150-க்கும், ரூ.12-க்கு வேக வைக்கப்பட்ட காய்கறிகள் ரூ.50-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

author avatar
murugan