இலங்கையில் அதிரடியாக கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் …!உத்தரவில் அதிபர் சிறிசேன கையெழுத்திட்டார்…!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அதிபரின் இந்த நடவடிக்கையை ஏற்காத விக்ரமசிங்கே, தானே பிரதமராக தொடர்வதாகவும், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் அதிபரை கேட்டுக்கொண்டார்.இந்த பலப்பரீட்சையை தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை வருகிற 14-ந்தேதி வரை அதிபர் முடக்கிவைத்தார். இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மற்றும் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகளால் இலங்கை அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது.

இது ஒரு புறம் சென்று கொண்டிருக்க பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே இலங்கை அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவில் அதிபர் சிறிசேன கையெழுத்திட்டார் .பிரதமர் ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்தார் இலங்கை அதிபர் சிறிசேன.