7 பேர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவைக்குப்  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 7 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 16 மாநிலங்களில் காலியாகும் 58 காலியிடங்களுக்கு வருகிற 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற நேற்றுடன் காலஅவகாசம் முடிந்த நிலையில், கூடுதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படாத இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், ஜே.பி. நட்டா உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அருண்ஜெட்லி போட்டியிடும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment