தங்களால் வளர்க்க முடியாது என குழந்தையை அரசிடம் ஒப்படைத்த பெற்றோர்…! பெயர் சூட்டிய கலெக்டர் சந்தீப் நந்தூரி..!

ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆண் குழந்தைக்கு ‘ஆதவன்’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குடும்பத்தினர் குழந்தையை வளர்க்க இயலாத காரணத்தினால், அரசுத் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு தொட்டில் குழந்தைகள் வருகிறது. இதனையடுத்து, குழந்தையை அங்குள்ள அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் அரசுத் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அந்த ஆண் குழந்தைக்கு ‘ஆதவன்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். பெயர்சூட்டிய பின் அக்குழந்தையை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.