கலப்பு திருமணத்தை எதிர்த்து மகளின் கருவை களைத்த பெற்றோர்!திடுக்கிடும் தகவல்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் கோவில் தாலுகாவை சேர்ந்தவர் சம்மந்தம்.இவரது மகள் சாருலதா ஆவார்.இவர் தலித் சமூதாயத்தை சேர்ந்த விஜய் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.

சாருலதா வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.குடும்பத்தில் சாதி வேறுபாடு காரணமாக இருவரின் காதலையும் அவர்களின் பெற்றோர் ஆதரிக்கவில்லை.இதனால் 5 வருடமாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களின் இந்த செயல் சாருலதாவின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை.இருவரையும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் திங்கள் கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேர்ப்பு கூட்டம் நடந்து வந்தது.

அப்போது சாருலதாவின் கணவர் விஜய் அந்த கூட்டத்திற்கு கையில் மனுவுடன் வந்துள்ளார்.அதில் அவர் என் மனைவி பெயர் சாருலதா.நாங்கள் இருவரும் வெவேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள்.

நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.இது பிடிக்காமல் அவளின் கும்பத்தினர் அவளை அடித்து உதைத்து சித்தரவதை செய்வதாக காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

இந்நிலையில் அவரின் மனைவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு தலித் பையனின் குழந்தை உன் வயிற்றில் இருக்க கூடாது என்று கூறி அதை வலுக்கட்டாயமாக கலைத்ததாகவும் தற்போது அவரின் மனைவி எப்படி இருக்கிறார் என்ன நிலையில் இருக்கிறார் என்று கூட தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மூன்று மாதமாக அவரது மனைவியை பிரிந்து பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் மனைவியின் குடும்பத்தினரால் அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரின் மனைவியை அவரிடமே ஒப்படைக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை