3 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி.!

0
128
Modi
Modi [Image source : file image ]

3 நாள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தார் பிரதமர் மோடி.

தனது 3 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு முடிவில் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று டெல்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்தார்.

டெல்லி விமான நிலையத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பிரதமரை வரவேற்றனர். அப்போது பேசிய நட்டா, உலகமே உங்களை பாராட்டுகிறது. பப்புவா நியூ கினியா பிரதமர் உங்கள் பாதங்களை தொட்டது. உங்கள் மீதான அவர்களின் மரியாதையை காட்டுகிறது என்றார்.

இந்த 3 நாள் பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் சென்ற அவர், ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மாநாடு மற்றும் குவாட் கூட்டத்தில் கலந்து கொண்டு, மற்ற நாடுகளின் பிரதமர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். அதன்பின், பப்புவா நியூ கினியா பயணத்தின் போது, இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பின் (எஃப்ஐபிஐசி) மூன்றாவது உச்சிமாநாட்டை பிரதமர் தொகுத்து வழங்கினார். உச்சிமாநாட்டின் போது பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார்.

இதனையடுத்து, மூன்றாவது நாள் பயணத்தில் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு சிட்னியில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான கலாச்சார விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.