பரபரப்பு…பள்ளி மதிய உணவில் பாம்பு…150 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.!!

பரபரப்பு…பள்ளி மதிய உணவில் பாம்பு…150 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.!!

Bihar school

பீகார் மாநிலம் அராரியாவில் உள்ள அரசுப் பள்ளியில் சனிக்கிழமை 150 குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பீகாரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில்இன்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய  உணவில் பாம்பு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அராரியா மாவட்டத்தின் ஃபோர்பேஸ்கஞ்சில் உள்ள அரசுப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உணவை உண்ட 150 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு ஃபோர்ப்ஸ்கஞ்சில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  மதிய உணவின் போது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தயாரித்த ‘கிச்சடி’ குழந்தைகளுக்கு பரிமாறப்பட்டது, அப்போது ஒரு தட்டில் பாம்பு இருந்தது.

இதுகுறித்து பள்ளியில் தகவல் பரவியதும், உடனடியாக உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனாலும், ஏற்கனவே இதனை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி எடுக்கத் தொடங்கியது, உடனடியாக ஃபோர்ப்ஸ்கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், அவர்கள் இன்று இரவுக்குள்  டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்” என்று ஃபோர்ப்ஸ்கஞ்ச் துணை-பிரிவு மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube