தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்! காரணம் என்ன?

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா, சத்திராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் – இந்திரா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் சென்னம நாயக்கன்பட்டியில், தென்னைமட்டை நார் கம்பெனி நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இந்திரா வெற்றி பெற்றார். இதனையடுத்து இவர், சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்தார்.

 இதனையடுத்து, இவர் சென்னம நாயக்கன்பட்டியில் இருந்தபடியே, அடிக்கடி சத்திரப்பட்டிக்கு சென்று வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கனவர் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஊராட்சி மன்ற தலைவி இந்திரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.