12 ஆண்டுகளுக்கு பின்…முக்கிய பிரமுகர் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,சிவகுமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்த நிலையில்,அதற்கு தவணை தொகையை செலுத்த சென்ற அவரது மகளை,சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் பலாத்காரம் செய்து,வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றினர்.

இதனையடுத்து,மனமுடைந்த அப்பெண்ணின் தாயார் இந்த பதிவை நீக்க உதவிடக் கோரி,அப்பகுதியை சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் வேலுசாமி அவர்களிடம் கெஞ்சியதை அடுத்து,அப்பெண்ணுக்கு உதவியாக,போலீசில் புகார் அளித்துவிட்டு இரவில் வீடு திரும்பிய வேலுசாமி அவர்களை கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் வழிமறித்து கொடூரமாக வெட்டி படுகொலை கொலை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,இந்த வழக்கில்,சிவகுமார் திரன்,மிலிடெரிகணேசன்,அருண்,அன்பு,ஆமையன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,அனைவரும் ஜாமீனில் வந்தனர்.

ஆனால்,அதன்பின்னர்,இந்த வழக்கில் தொடர்புடைய ஆமையன் அதே கும்பலால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.பூபதி என்பவர் தலைமறைவானார்.

இதனையடுத்து,இளம்பெண் பாலியல் வழக்கு,வேலுசாமி கொலை வழக்கு தனித்தனியாக நடைபெற்று வந்த நிலையில்,இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த வருடம் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில்,முக்கிய குற்றவாளியாக இருந்த ஆமையன் கொலை செய்யப்பட்டதன் காரணமாக,வழக்கில் முதல் குற்றவாளியான சிவகுமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல்  தண்டனையுடன், 35 லட்சம் அபராதமும் விதித்து நாமக்கல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக,இந்த வழக்கில் தண்டனை பெற்ற சிவக்குமார் சிறை யில் உள்ளார்.ஆனால்,வேலுசாமி கொலை வழக்கில் சிவக்குமாரை தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

இந்நிலையில்,வேலுசாமி கொலை வழக்கின் தீர்ப்பு,இன்று (மார்ச் 14 ஆம் தேதி) நாமக்கல் விரைவு நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது.கடந்த 12 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை  பள்ளிப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும்,அப்பகுதி மக்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.