விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரிக்கும் பழனிசாமி – முக ஸ்டாலின் அறிக்கை.!

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்திருப்பதுதான்
தமிழக அரசால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மிக மோசமானது என்று முக ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் பழனிசாமி பதவியைக் காக்கவும், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும் இப்பாதகத்தை செய்ததாக ஒப்புக் கொண்டு விவசாயிகளிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமே அவருக்கிருக்கும் ஒரே வழி என்று முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பாஜகவின் கூட்டணி கட்சி உட்பட 13 கட்சிகள் எதிர்க்கின்றன. அதிமுக உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டுமே ஆதரிக்கின்றன. ஆதரித்துவிட்டு, விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்றும் சொல்கிறார் முதல்வர் பழனிசாமி என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்து, உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றவர்.

மேலும், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை பறித்திட தீவிரம் காட்டுபவர். பிஎம் கிஷான் திட்டத்தில் 6 லட்சம் போலிகளை சேர்த்து, விவசாயிகள் வயிற்றில் அடித்தவர் இன்றைக்கு விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்