பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்!! இந்தியா ராணுவம் பதிலடி

  • சுந்தர்பேனி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம்  அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
  • இரவு 10.25 மணிக்கு நடத்திய இந்த அத்துமீறிய துப்பாக்கிச்சூடு தாக்குதல்  இன்று அதிகாலை வரை நீடித்தது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்திய ராணுவம் பிப்ரவரி 26- ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் மூலம்  பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை அழித்தது.இந்திய விமானப் படைகள் நடத்திய  தாக்குதல் பிறகு இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின்  சுந்தர்பேனி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம்  அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
நேற்று இரவு 10.25 மணிக்கு நடத்திய இந்த அத்துமீறிய துப்பாக்கிச்சூடு தாக்குதல்  இன்று அதிகாலை வரை நீடித்ததாகவும்  ராணுவம் தரப்பில் வெளியான தகவல்கள் கூறுகின்றன.
மோர்டார்கள் ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
author avatar
murugan

Leave a Comment