ராணுவம் குறித்து அவதூறு செய்தி ! பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர் கைது

பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர்  அந்நாட்டின் இராணுவத்தை அவதூறு செய்ததாக  கைது செய்யப்பட்டார்.

 இது குறித்து  போலீசார் நபி மேமன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, ​​பாகிஸ்தான் இராணுவத்தை அவமதிக்க முயன்றதாக குற்றம் சாட்டிய  ஒருவரின்  புகாரின் பேரில் பிலால் ஃபாரூகி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.மேலும் “பிலாலின் தொலைபேசியை போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாவேத் கான் என்பவர் புகார் அளித்துள்ளதாகவும்,பாகிஸ்தான் இராணுவம் எதிராகவும்  பிலால் ஃபாரூகி பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் இராணுவத்தை “அவதூறு” செய்ததாகவும், அத்தகைய சமூக வலைத்தள பதிவுகள், “தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்படலாம் என்றும் கான் குற்றம் சாட்டினார்.

 பத்திரிகையாளர் கைது தொடர்பாக கராச்சி பத்திரிகையாளர்கள் சங்கம்வெளியிட்டுள்ள  அறிக்கையில், “பிலாலை கைது செய்வது சுதந்திரமான மற்றும் சுயாதீனமான குரல்களைப் பறிப்பதற்கான மோசமான மற்றும் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.