பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தஃபீக் உமருக்கு கொரோனா

By surya | Published: May 25, 2020 03:13 PM

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தஃபீக் உமருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் இதுவரை 54,601 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 1,133 பேர் உயிரிழந்த நிலையில், 17,198 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக இருந்தவர், தஃபீக் உமர்.இடதுக்கை ஆட்டக்காரராக இவர், பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். டெஸ்ட் போட்டி மட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளிலும் அவர் பங்கேற்பார். இவர், பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாண்டார். 2006 முதல் 2010ஆம் ஆண்டு வரை இவர் எந்தொரு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் அவர், 2014 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

தற்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு உடல்நிலை சரிஇல்லதாகவும், அதற்காக தன்னை கொரோனா பரிசோதனையில் ஈடுபடுத்தியதாகவும் அவர் கூறினார். அப்பொழுது கொரோனா "பாசிட்டிவ்" என வந்துள்ளதாகவும், அவர் அவன் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Step2: Place in ads Display sections

unicc