11 தொடர் தோல்விக்கு பின் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி !

இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி நேற்று மோதியது. இப்போட்டி  ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் அடித்தது.
349 ரன்கள் இலக்குடன் பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 50 ஒவரில்  334 ரன்கள் அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றது.
பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 12 போட்டிகளில் 11 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்தது.மேலும் இந்த வருட உலகக்கோப்பையில் முதல் போட்டியில் உலகக்கோப்பையில் இரண்டாவது குறைந்தபட்ச  ரன்களை எடுத்தது. இரண்டாவது போட்டியில் உலகக்கோப்பையில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை குவித்தது பாகிஸ்தான்.

 
 

author avatar
murugan