#BREAKING: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு – அதிபர் உத்தரவு..!

பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி  நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

பிரதமர் இம்ரான் கான் அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த, பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் நடவடிக்கைகள் இன்று நடைபெற்ற நிலையில், பிரதமர் இம்ரான் கான் சட்டசபைக்கு வரவில்லை. இதனால், பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம்கான் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்தார். இந்நிலையில், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி  நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 3 மாதத்துக்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அடுத்தடுத்து அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இடைக்கால பிரதமராக இம்ரான் கான் தொடர்கிறார். கடந்த 2018 இல் பிரதமராக  பதவியேற்ற இம்ரான்கானின் ஆட்சிகாலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan