மனம் புண்படும் வகையில் நடந்து கொண்டதற்காக ஹிந்து மதத்தவர்களிடம் பாகிஸ்தான் எம்பி மன்னிப்பு!

மனம் புண்படும் வகையில் நடந்து கொண்டதற்காக ஹிந்து மதத்தவர்களிடம் பாகிஸ்தான் எம்பி மன்னிப்பு!

எதிர்க்கட்சித் தலைவரை விமர்சிக்கும் நோக்கத்தில் ஹிந்து மதத்தினரின் மனம் புண்படும் வகையில் நடந்து கொண்டதற்காக பாகிஸ்தானின் எம்.பி ஹுசைன் அவர்கள் ஹிந்து மதத்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் ஆளும் கட்சி அங்கு நடைபெறக்கூடிய ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளுக்கு அவ்வளவாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் எம்.பி ஒருவர் அண்மையில் இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதாக பெரும் சர்ச்சை ஒன்று கிளம்பியது.

எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை விமர்சிக்கும் நோக்கத்தில் ஆளும் பாகிஸ்தான் கட்சியின் எம்.பி ஹுசைன் அவர்கள் ஹிந்து கடவுளான காளி தேவியின் புகைப்படத்தை பதிவிட்டு அதை எதிர்க்கட்சி தலைவர் மரியம் நவாஸ் அவர்களை குறிக்கும் வகையில் விமர்சித்துள்ளார். இதற்கு பாகிஸ்தானின் ஹிந்து கவுன்சில் சார்பில் கடும் கண்டனம் எழுந்தது எதிர்ப்புகள் வலுத்து வந்தது. இதனையடுத்து தனது டுவிட்டரில் இருந்து இந்த பதிவை நீக்கிய எம்.பி ஹுசைன் பிறர் மனம் புண்படும் வகையில் நடந்து கொண்டதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube