##பலே-தீவிரவாதி ஹபீஸ்க்கு வங்கி வழி பணம்- இம்ரான் ஏற்பாடு!

##பலே-தீவிரவாதி ஹபீஸ்க்கு வங்கி வழி பணம்- இம்ரான் ஏற்பாடு!

பாகிஸ்தானின்  கடுமையான முயற்சியால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தடைக் குழு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்கை திரும்ப ஒப்படைத்து உள்ளதாக தகவல் மேலும் இதன் மூலம் அவர் தனது அடிப்படை செலவுகளுக்கு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது என்று அறியப்படும் ஜமா-அத்-தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக  ஹபீஸ் சயீது (70)  உலா வந்தவர்.இந்தியாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் மூளையாகவும் தொடர் பயங்கரவாதத்தில் தொடர்புடையவனாகவும் உள்ள இவனை இந்தியா தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

ஐ.நாவும் இவரை பயங்கரவாதி என்று தான் கூறியுள்ளது. மேலும் அமெரிக்கா ஹபீஸின் தலைக்கு 10 மில்லியன் டாலர்கள் அறிவித்து உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கிய வழக்கில் தண்டனை பெற்று லாகூர் மத்திய சிறையில் ஹபீஸ்  உள்ளார். இதனால் ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்குகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆனது முடக்கி வைத்திருந்தது.

இந்நிலையில் ஹபீஸ் தனது குடும்பத்தினரின் அடிப்படை செலவுகளுக்காக அவரது வங்கிக் கணக்கில் இருந்து பாக்கெட் மணி பெற அனுமதிக்க வேண்டும் என்று பயங்கரவாதிகள் சார்பாக இம்ரான் அரசு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் கோரிக்கை வைத்தது. தொடர்ந்து வலியுறுத்தி வரவே அதனை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஏற்று ஹபீஸ் சயீது, அப்துல் சலாம் பூட்டாவி, ஹாஜி எம் அஷ்ரப், யஹ்யா முஜாஹித் மற்றும் ஜாபர் இக்பால் ஆகியோர் தங்கள் வங்கிக் கணக்குகளை மீட்டெடுத்து உள்ளனர். பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடு அதன் போலித்தனத்தை  உலகரங்கில் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது

author avatar
kavitha
Join our channel google news Youtube