நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்ததற்கு பாக். பதிலடி!

நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்ததற்கு பதிலடியாக, அந்நாட்டுடன் பாதுகாப்பு

By venu | Published: Jan 10, 2018 02:01 PM

நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்ததற்கு பதிலடியாக, அந்நாட்டுடன் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த தகவல் பரிமாற்றங்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி நியூஸ் இண்டர்நேஷனல் பத்திரிகையில், வெளியுறவு அமைச்சரான குர்ஹம் டச்டிக் கான்  பொதுக்கூட்டம் ஒன்றில் இத்தகவலை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ உதவி தங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்றும், அந்நாட்டுடன் சமரசமற்ற பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் குர்ஹம் டச்டிக் கான் கூறியுள்ளார். இதனிடையே பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்புகள் நிறுத்தப்பட்டதாக உறுதி செய்ய இயலவில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. source: dinasuvadu.com
Step2: Place in ads Display sections

unicc