பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டதையடுத்து   காவல் நிலையத்தை சூறையாடியவர்கள் மீது போலீஸ்சார்  துப்பாக்கி சூடு நடத்தினர் .இதில் இருவர் உயிரிழப்பு எனத் தகவல் .

கிழக்குப் பாகிஸ்தான் கசூரில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியின் உடல் கடந்த இரு தினங்களுக்கு முன் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கசூர் மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். காவல்நிலையம் ஒன்றை பொதுமக்கள் சூறையாடிய நிலையில், அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

source: dinasuvadu.com