தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price [file image]

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். இன்றைய தினம் … Read more

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nayanar Nagendran

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம் தேதி இந்த தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சதிஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று நபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதன்பின் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் … Read more

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Rahul Gandhi - Mallikarjun Kharge

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.  வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியாக ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்ட தேர்தலிலும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு … Read more

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

cancer causing chemicals

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட சில மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்டதால், அந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட … Read more

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE exam

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில்,10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய 2-ம் கட்ட தேர்வில் முழுமையாக 100 மதிப்பெண்களை பெற்று 2 பெண்கள் உட்பட 56 மாணவர்கள் … Read more

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar CM Nitish Kumar - Saurabh Kumar

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இளம் பிரமுகர் சவுரப் குமார் என்பவர் நேற்று இரவு பாட்னா பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று பர்சா பஜார் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சவுரப் கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சவுரபை சரமாரியாக சுட்டனர். இதில் சவுரபின் தலை மற்றும் கழுத்து … Read more

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான உரிமை தகராறு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதாவது, இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களைப் பயன்படுத்த எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால், ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். … Read more

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

Shubman Gill

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த சூழலில் நேற்று ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோதியது. இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் கீழே இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது என்பது முக்கியமான ஒன்றாக … Read more

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

rahul modi

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த வார வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து, 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (ஏப்ரல் 26ஆம் தேதி) இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 89 மக்களவைத் தொகுதிகளிலும் புயலாய் பிரச்சாரம் மேற்கொண்ட வந்த நிலையில், … Read more

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஐ.நா வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கென்யாவில் கனமழைக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். கென்யாவில் மார்ச் மாத இறுதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த வாரத்தில் பெய்த மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெரிய வெள்ள அபாய ஏற்பட வழி வகுத்தது. … Read more