திருப்பூரில் பனியன் சந்தையில் பயங்கர தீவிபத்து… பொருட்கள் எறிந்து நாசம்.!

Tirupur fire accident

திருப்பூரில் இயங்கிவரும் பனியன் சந்தையில் தீவிபத்து ஏற்பட்டதில் கோடிக்கணக்கான பொருட்கள் எறிந்து நாசம். திருப்பூரில் உள்ள காதர்பேட்டை பகுதியில் இயங்கிவரும் பனியன் சந்தையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீ அனைத்து கடைகளுக்கும் வேகமாகப் பரவியது. இந்த பனியன் சந்தையில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கடைகள் தாற்காலிகமாகப் போடப்பட்டு விற்பனை செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் … Read more

இன்று மண்டபம் பகுதி மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

strike

இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மண்டபம் பகுதி மீனவர்கள் அறிவிப்பு. சமீப காலமாக இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை என அட்டூழியங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 21ம் தேதி 5 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இதனையடுத்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 5 மீனவர்களையும், விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி … Read more

இன்றைய (24.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

Petrol price New

399-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் … Read more

2024-ல் பாஜக பெறப்போகும் ஹாட்ரிக் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது – வானதி சீனிவாசன்

vanathi sinivasan

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து வானதி சீனிவாசன் அவர்கள ட்விட்டர் பக்கத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஒவ்வொரு முறையும் மக்களவைத் தேர்தல் வரும்போது, எதிர்க்கட்சிகள் இப்படி கூட்டம் நடத்துவது வழக்கமானதுதான். அதைத்தாண்டி, பாட்னா கூட்டத்தில் முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றதாகச் சொல்கிறார்கள். இதில் காங்கிரஸ் மட்டுமே தேசிய கட்சி. மற்ற கட்சிகள் எல்லாம் ஒரு மாநிலம், இரண்டு மாநிலங்களில் மட்டுமே உள்ள கட்சிகள். … Read more

இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் மனமார்ந்த பாராட்டுக்கள் – முதல்வர் ட்வீட்

Stalin Tncm p

விருது பெற்ற உதயசங்கர் மற்றும் ராம் தங்கம் இருவருக்கும் முதல்வர் பாராட்டு.  “ஆதனின் பொம்மை” நூலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு இவ்வாண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘திருக்கார்த்தியல்’ என்ற சிறு கதைக்காக திரு. ராம் தங்கம் அவர்களுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் பாராட்டு தெரிவித்து முதல்வர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதமின் பொம்மை-யை உருவாக்கி, அதற்கு … Read more

ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் – லாலு பிரசாத்

laluprasad

இன்னும் நேரம் இருக்கிறது, ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளலாம் என லாலு பிரசாத் யாதவ் பேட்டி.  பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதிலும் சரி, பாரத் ஜோடோவிலும் சரி சிறப்பாக செயல்பட்டார் ராகுல் காந்தி. தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம், நீங்கள் முன்னரே திருமணம் … Read more

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin

செய்தியாளர் சந்திப்பில் நான் கலந்து கொள்ளாமல் எந்த நோக்கத்தோடும் நான் வெளியேறவில்லை என முதல்வர் பேட்டி.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்பினார். அங்கு செய்தியாள்களுக்கு பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியது; இதேபோல, தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் என்று பேசினேன். எந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அக்கட்சியின் தலைமையில் … Read more

சென்னை மக்களுக்கு அரிய வாய்ப்பு..! திட்ட பயிற்சியாளர் பணிக்கு ஆட்கள் தேவை..! உடனே அப்ளை பண்ணுங்க..

IIITDM Kancheepuram

ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம், திட்ட பயிற்சியாளர் (Project Intern) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம் (IIITDM Kancheepuram) என்பது இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2007 இல் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும். இது சென்னையின் புறநகரில் அமைந்துள்ளது. தற்போது, ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம், 1000 ஹெச்பி மோட்டாருக்கு காற்றோட்டத்தை வழங்கக்கூடிய விசிறியை வடிவமைத்து உருவாக்கும் திட்டத்தில் பணியாற்ற, திட்ட பயிற்சியாளர் (Project Intern) பணிக்கான வேலைவாய்ப்பு … Read more

பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ..!

tandruff

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட வீட்டிலேயே இயற்கையான முறையில் மருந்து செய்வது எப்படி என்று பார்ப்போம்.  இன்று பெரும்பாலானோர் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தொல்லையில் இருந்து விடுபட பலரும் கடைகளில் கெமிக்கல் கலந்த சாம்பூகளை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். இதனால் நமக்கு முடி உதிர்வு, முடி வெடிப்பு போன்ற பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நமது உச்சந்தலையில் பொடுகு என்பது மலாசீசியா என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்த நுண்ணுயிர் உச்சந்தலையில் ஒரு சாதாரண பகுதியாக இருந்தாலும், … Read more

பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்க கட்டுப்பாட்டு மையம்..! சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைப்பு..!

ChennaiSafeCityProjects

பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்க கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பை அதிகரிக்கவும், நகரத்தில் நடக்கும் குற்றங்களை கண்காணிக்கவும், சென்னை சேஃப் சிட்டி திட்டங்களின் கீழ், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார். மேலும், சென்னை முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் விதமாக பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட முக்கியமான 1,750 இடங்களில், 5,250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. … Read more