எதிர்கட்சித்தலைவர் பதவி ராஜினாமா… துணை முதல்அமைச்சராக பதவியேற்றார் அஜித் பவார்.!

Minister Ajit

மகாராஷ்டிர மாநில துணை முதல் அமைச்சராக அஜித் பவார், ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றார் . மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, எதிர்க்கட்சித்தலைவரும் சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) சில எம்.எல்.ஏ க்களுடன், சேர்ந்து அம்மாநிலத்தில் ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைவதற்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். #WATCH | NCP leader Ajit Pawar takes oath as Maharashtra Deputy … Read more

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்… துணை முதல்வராகிறாரா எதிர்கட்சித்தலைவர்?

Ajit pawar

மகாராஷ்டிரா மாநில எதிர்கட்சித்தலைவர் அஜித் பவார், ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல். மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, எதிர்க்கட்சித்தலைவரும் சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) சில எம்.எல்.ஏ க்களுடன், சேர்ந்து அம்மாநிலத்தில் ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைவதற்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #WATCH | Maharashtra: NCP leader Ajit Pawar along … Read more

செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு 3வது முறையாக சம்மன் – வருமான வரித்துறை.!

SenthilBalaji - AshokKumar

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு வருமான வரித்துறை 3வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக, ஏற்கனவே 2 முறை அனுப்பப்பட்ட சம்மனுக்கு அசோக் தரப்பில் இருந்து இதுவரை பதில் அளிக்காததால், 3வது முறையாக சம்மன் அனுப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியது வருமானவரித்துறை … Read more

அலர்ட்..11 மாவட்டங்களில் கனமழை..2 மாவட்டங்களில் மிக கனமழை…வானிலை மையம் தகவல்..!!

RAIN

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும். 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

ஒடிசா ரயில் விபத்து: யார் இந்த 52 பேர்…ஒரு மாதம் ஆகியும் தீரா சோகம்..!

Odisha train accident

ஒடிசா ரயில் விபத்து சோகம் 1 மாதத்தை கடந்தும் அதன் தாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை. இதுவரை இல்லாத மிக மோசமான விபத்தாக கூறப்படும் ஒடிசா ரயில் விபத்து நடந்து இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. ஜூன் 2ல் , பஹானகா ரயில் நிலையத்தில் வேகமாக வந்த கோரமண்டல் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. அதே சமயம், கோரமண்டல் பெட்டிகள், பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ரயில் மீது மோதியதில், 2 ரயில்களிலும் பல பெட்டிகள் தடம் … Read more

பரபரப்பு…கட்டுப்பாட்டை இழந்த கார்…50 அடி கீழே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்தால் 5 பேர் காயம்..!!

Railway Tracks

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள போர்கேடி மேம்பாலத்தில் இருந்து இன்று காலை வேகமாக சென்றுகொண்டிருந்த வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே 50 அடி உயரத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. விபத்து காரணமாக காரில் பயணம் செய்த குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார் கட்டுப்பாட்டை இழந்து கீழே ரயில் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அந்த சமயம் அப்பகுதியில் … Read more

மதுபான கடைகளில் சலுகை..விளம்பரம் செய்ய தடை..புதுச்சேரி கலால்துறை அதிரடி எச்சரிக்கை.!!

tasmac pondicherry

புதுச்சேரியில் மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள். விடுதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் மதுபான விற்பனை சம்பந்தமான சலுகைகள் அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். பெண்களுக்கு மது இலவசம். மது வாங்கினால் பரிசு பொருள்கள் இலவசம் போன்றவற்றை குறித்த விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வைத்துள்ளதாக  கலால் துறைக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மதுபானம் விற்பனை சலுகைகள் சம்பந்தமான பதாகைகள், சுவரொட்டிகள், நாளேடுகளில் வெளியிடுதல், பரிசு பொருட்கள் வழங்குதல் அல்லது வேறு எந்த … Read more

மக்களே அலர்ட்: இன்று 18 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது.!

Rain

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மிதமான  மழை … Read more

தக்காளி விலை உயர்வு – அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை.!

tomato

தக்காளி விலை ஒரு கிலோ 130 என உயர்ந்ததையடுத்து, அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை நடத்துகிறார். ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். விலையை கட்டுபடுத்த ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என என தகவல் வெளியாகியுள்ளது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி நேற்று 120-க்கு விற்பனையான நிலையில், … Read more

தமிழ் எல்லோரையும் வாழ வைக்கும் – முதல்வர் ஸ்டாலின் உரை.!

Tamilnadu CM MK Stalin

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாடி கொண்டிருக்கிறார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும் என்றார். #Live: FeTNA – சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் நடத்தும் 36-ஆவது தமிழ்விழாவில் உரைhttps://t.co/eeVWLnqwvu — M.K.Stalin (@mkstalin) July 2, 2023 மேலும் அவர் கூறுகையில், ‘இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்பட வேண்டும். மொழி உணர்வு என்பது … Read more