செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை.! அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை.! உயர்நீதிமன்றத்தில் வாதம்.!

Minister Senthil balaji

செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது.  அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு, தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரை அமலாக்கத்துறை சட்டவிரோமாக கைது செய்யப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுமீதான விசாரணை இரு நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளியான போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட … Read more

சிவகங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! 7 ஆம் வகுப்பு மாணவன் பலி…

school van maccident

சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சருகனேந்தல் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 7ம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. தற்போது, காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், … Read more

முதல்வர் கொடுத்த புகார்கடிதம்… தமிழக ஆளுநர், டெல்லியில் தலைமை வழக்கறிஞருடன் சந்திப்பு.!

R.N.Ravi met Advocate

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முக்கிய ஆலோசனைக்காக சந்தித்து பேசியிருக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒருவாரம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழக அரசுடன் ஆளுநருக்கு இருந்து வரும் நிலைப்பாடு குறித்தும் சட்ட ஆலோசனைக்காகவும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் இந்த சந்திப்பில் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், மாண்புமிகு மத்திய உள்துறை … Read more

நீடிக்கும் தேர்தல் பதற்றம்… மே. வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் குண்டு வீச்சு.! 

West bengal Local Body Election

மேற்கு வங்கத்தில் டயமண்ட் துறைமுகம் பகுதி வாக்கு எண்ணும் மைய்யத்தில் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துளளது.  மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி சனிக்கிழமை அன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நாள் முதல் தற்போது வரை மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின. மேலும்  697 வாக்குச்சாவடிகளில் நேற்று மருவாக்குப்பதிவு … Read more

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்…தேடுதல் பணி தீவிரம்.!

Helicopter missing in Nepal

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருந்து இருந்து காத்மாண்டு தலைநகரம் நோக்கி பயணித்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போயுள்ளது. 9NMV என்ற அழைப்புக் குறியுடன் கூடிய ஹெலிகாப்டர், காலை 10:15 மணியளவில் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை நேபாள சிவில் விமான போக்குவரத்து … Read more

டெல்லியில் பாஜக தலைமையில் ஆலோசனை கூட்டம்.! இபிஎஸ், ஜி.கே.வாசன், அன்புமணிக்கு அழைப்பு.!

GK Vasan - Anbumani Ramadoss - Edappadi Palanisamy

பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமாக இருப்பதால் பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளான. ஏற்கனவே, காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அதன் பிறகு வரும் 17,18ஆம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல, ஆளும் பாஜகவும் தங்கள் ஆதரவு … Read more

இதுவரை இவ்வளவு மோசமா பார்த்ததில்லை… இந்திய டெஸ்ட் ஜெர்சியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!

IndianJerseydream11

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடும் இந்திய அணியின் டெஸ்ட் ஜெர்சிக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் செய்துவருகின்றனர். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நாளை இரு அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில் விளையாடும் இந்திய அணியின் ஜெர்சியில் புதிதாக ஸ்பான்சராக இணைந்துள்ள ட்ரீம் 11 இடம்பெற்றுள்ளது. Indian Top 5 in Tests cricket. pic.twitter.com/cZX1lmS7lq … Read more

தமிழ்நாட்டில் தக்காளினா…கேரளாவில் அரிசி விலை உயர்வால் மக்கள் அவதி.!

tomato and rice price

தமிழகத்தில் நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவது போல், கேரளாவில் அரிசியின் விலை பொதுச்சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.10 வரை அதிகரித்துள்ளது. மட்டா வடி அரிசி கிலோ ரூ.46ல் இருந்து ரூ.54 ஆகவும், சுரேகா அரிசி ரூ.38ல் இருந்து ரூ.48 ஆகவும் உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் ஓணத்தின் போது விலை ரூ.60ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. அரசு சந்தையில் ஜெயா அரிசி விலை குறைவால், பொது சந்தையில் டூப்ளிகேட் அரிசி விலை ரூ.34 … Read more

#Article370: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து – ஆக.2ம் தேதி முதல் தினம்தோறும் விசாரணை!

Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகள் ஆக.2 முதல் தினசரி விசாரிக்கப்படும் என அறிவிப்பு. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம்தோறும் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம்தோறும் வழக்குகளின் விசாரணை … Read more

செந்தில் பாலாஜி விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு தாக்கல்!

EDSummon ashok

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல். சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு செந்தில் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் ஆர்என் இளங்கோ வாதாடி வருகின்றனர். செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றும், நாளையும் நடைபெறும் என 3வது நீதிபதி கார்த்திகேயன் கடந்த 7ம் … Read more