தாகத்தில் தவிக்கும் தலைநகரம்..! தன் பங்கிற்கு 18 லட்சம் தண்ணீரை சேமித்து கொடுத்த ராயல் என்ஃபீல்டு..!

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.தமிழகமெங்கும் 24 மாவட்டங்களில் தண்ணீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் மழை தமிழகத்தில் அநேக இடங்களில் பெய்து வருகிறது.இதனை மக்கள் தங்கள் பங்கிற்கு சேமித்து வருகின்றனர். தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சிங்கார சென்னை தண்ணீர்க்கு தவித்து வருகின்றது.இந்நிலையில் பைக் நிறுவனங்கள் தங்களது பங்கிற்கு தண்ணீரை சேமிக்க வழிகளை உருவாக்கி வருகின்றது. மேலும் வாடிக்கையாளர்களின் சேவையையும் சிறப்பாகவும் செய்கிறது.தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்தும் வாகனங்களை வாஷ் … Read more

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினர் 80 பேரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தினகரனின் அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் விலகி வருகின்றனர்.அந்தவகையில் நேற்று தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த நிலையில்  வடசென்னையை சேர்ந்த அமமுகவினர் பலர் அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினர் 80 பேரும் அதிமுகவில் இணைந்தனர்.

தண்ணீர் தட்டுப்பாடு -நீர் நிலைகளை தூர்வார அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் -ரஜினி

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் 24 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ளது.இதனால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அதனை சேமித்து வைக்க ஏரி குளங்கள் ,மற்றும் அணைகளை தூர் வாரமால் உள்ளதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ஏரி -குளம் அவற்றிக்கு கால்வாய் அமைப்புகள் முற்றிலுமாக இல்லாததால் நீரை சேமிப்பது மற்றும் நீரை  கடத்துவது  கடும் சவாலாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் நடிகர் … Read more

வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற Wireless Earphones- பற்றிய தகவல்கள்

இந்தியாவில் பிரபலமான NOISE பிராண்டு  2  புதிய  Wireless Earphoneகளின் மாடல்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. NOISE அறிமுகம் செய்துள்ள Noise Tunesport wireless Earphone மற்றும் Noise  tunedio wireless Earphones-என்று அழைக்கப்படும் இரண்டு Earphones களில் செக்யூர் ஃபிட் இயர்பட்களில் காந்த வசதி கூகுள் அசிஸ்டண்ட்  பட்டன்  வழங்கப்பட்டுள்ளது.     Noise Tunesport wireless Earphones 45 x 8 x 2 C.M  அளவில் உருவாக்கப்பட்டுள்ளது  … Read more

எதிர்ப்பார்ப்பை எகிரவைக்கும் Android SmartTV..!அறிமுகம் பற்றி தகவல்கள்

இந்தியாவில் 4 புதிய Android SmartTV களை ஜெர்மனியை சேர்ந்த மெட்ஸ் என்கின்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த வகை ஸ்மார்ட் டி.விகளின்  மாடல்களில் இன்பினிட்டி ரகத்தை சேர்ந்த  டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த SmartTV -களில் கூகுள் சான்று பெற்றுள்ள  Android வசதிகளை அளித்துள்ளது.அதனுடன் Google play store- ல் கிடைக்கும் பல லட்சம் செயலிகளை இயக்கும் வசதிகளை கொண்டுள்ளது. அதன் படி 4 வகை Android -SmartTVகள் 32 INCH (M32E6)  HD  Android  … Read more

குடிநீர் பிரச்சனையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும் : ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்களுக்கு, தண்ணீர் வழங்கி உதவி வரும் தனது ரசிகர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், குடிநீர் பிரச்சனையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும் என்றும், இதற்காக … Read more

சல்யூட் மேனுக்கே! திருப்பி சல்யூட் அடித்த முகமது ஷமி !

நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது. போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. … Read more

பிரபல நடிகர் யோகி பாபு நடித்துள்ள கூர்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூர்கா. இப்படத்தில் பிரபல நடிகரான யோகிபாபு நடித்துள்ளார். இப்படம் காமெடி ஆக்சன் கலந்த படமாக உருவாக்கி யுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் நடித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வருகிற ஜூலை 12-ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது-அமைச்சர் அன்பழகன்

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது  என்று  அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அமைச்சர் அன்பழகன்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,  சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆட்சி நீடித்து இருக்கும் என்று  அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இன்றைய (ஜூன் 29)பெட்ரோல், டீசல் விலை!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து உயர்ந்து உள்ளது.அதன் படி பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து லிட்டர்  ரூ.73.01காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.67.81 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.